தலை முடி வளர சித்தர் ரகசியம் | Siddha Maruthuvam Hair Growth

தலை முடி வளர சித்தர் ரகசியம் | Siddha Maruthuvam Hair Growth

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் பிரசனையாக உள்ளது. இவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது கடினம். ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இருந்தால், ஒருசில இயற்கையான சிகிச்சைகளின் மூலம் முடியை வளரச் செய்யலாம்.

இந்த இயற்கை முறையை பின்பற்றி அவற்றைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் விரைவில் முடி வளர்வதைக் காணலாம். குப்பையில் எறிந்தாலும் குன்றுமணி கறுக்காது ” என்று ஒரு பழமொழி உண்டு.
இந்தியாவைச் சேர்ந்த இந்த தாவரம் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வேலி மற்றும் புதர்களிலும் வளர்கிறது. இந்தியாவில் பண்டைய காலத்தில் பொன் மற்றும் வைரங்களின் அளவு அறிய விதைகள் எடைகளாகப் பயன்பட்டன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இந்த விதைகளில் உள்ளன.

கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை , ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்: நீர்=85% மாவுப்பொருள்=9.2% புரதம்=4.4% கொழுப்பு=0.8% கால்சியம்=62 யூனிட் இரும்புத் தாது=8.9 யூனிட் பாஸ்பரஸ்=4.62% இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.

கரிசலாங்கண்ணி மருத்துவக் குணங்கள்:
உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும். கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும். உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும். புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும். ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது. விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும்.

“கையாந்தகரை சாறுநா லுபலம் யெடுத்து
ரெண்டுபலம் குன்றிமணிப்பருப்பு கலந் தரைத்து
ஒருபலம் எள் எண்ணெய்சேர்த் துகாய்ச்சி சீலை வடிகட்டி
தினம் பூசப்பா கிழவனுக்கும் குமாரன்போல் சடைகாணும்”.

– அகத்தியர் குணபாடம் –

This Video is about Agathiyar Siddha Maruthuvam that deals with hair growth remedies. You can grow your Hair by using hair growth in Tamil tips given in the Video.

Agathiyar Siddhar has given his formula for Agasthya Rasayanam that can help hair growth quickly.

This hair growth in Tamil youtube video helps people to formulate their own Siddha Maruthuvam hair growth remedies.